ரூ.304 அதிரடியாக குறைந்த தங்கம்: வாங்கலாம் மக்களே..!

வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 குறைந்துள்ளது.

ரூ.304 அதிரடியாக குறைந்த தங்கம்: வாங்கலாம் மக்களே..!
தங்கம் வெள்ளி நிலவரம்

கடந்த வாரம் தங்கத்தின் விலை ஏற்றத்துடனே காணப்பட்டது. மேலும், கடந்த 3 நாள்கள் சந்தை விடுமுறை என்பதால் தங்கம் மற்றும் வெள்ளி விலை மாற்றமின்றி தொடர்ந்தது.

இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.38 குறைந்துள்ளது. அதன்படி 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4876 எனவும் சவரன் ரூ.39008 எனவும் விற்பனையாகிறது. 24 காரட் 99.99 தூயத் தங்கத்தை பொறுத்தவரை கிராமுக்கு ரூ.5278 எனவும் சவரன் ரூ.42224 எனவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆக தங்கம் சவனுக்கு ரூ.304 குறைந்து காணப்படுகிறது.

வெள்ளி விலை
வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 குறைந்துள்ளது. தற்போது கிராம் ரூ.63.80 என நிர்ணயிக்கப்பட்டு கிலோ பார் வெள்ளி ரூ.63 ஆயிரமாக உள்ளது. பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை.
ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 எனவும் டீசல் லிட்டர் ரூ.94.24 எனவும் தொடர்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Gold rates today 16 august 2022 the gold rate in chennai decreased by rs 38 per gram