scorecardresearch

தங்கம் விலை உயர்வு: ஒரு சவரனுக்கு இவ்வளவு ரேட்!

gold rate today chennai 22k Tamil News: சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ரூ.38,040-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Gold rates today, 02 august 2022, gold price get hike
gold price today chennai in tamil

Gold rates today in tamil: உக்ரைன் மீதான ரஷ்யாவின் படைப்பு உலகம் முழுதும் பொருளாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய், தங்கம் போன்றவற்றின் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. மேலும், பங்குச்சந்தைகளின் சரிந்து வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால், உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தில் தங்கள் முதலீடுகளை செய்து வருகின்றனர். இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்த வண்ணம் இருக்கிறது.

கடந்த ஜூன் 1ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து, சவரன் 37,920 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால், வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் மறுநாளான ஜூன் 2ஆம் தேதி தங்கம் விலை 160 ரூபாய் உயர்ந்து, சவரன் 38,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன்பிறகு, தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை அதிரடியாகக் குறைந்தது. அதன்படி, செவ்வாய் கிழமை (ஜூன் 14) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 95 ரூபாய் அதிரடியாகக் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 4,740க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு 760 ரூபாய் அதிரடியாகக் குறைந்து 37,920 ரூபாயக்கு விற்பனையானது.

இதேபோல், புதன்கிழமை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து விற்பனையானது. அதன்படி சென்னையில், கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து 4,715க்கும், சவரன் 37,720ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து 4755 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.38,040-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளியின் விலை ஒரு ரூபாய் உயர்ந்து ரூ.67.00-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.67,000 ஆக உள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Gold rates today 17 june 2022 gold price get hike

Best of Express