Advertisment

தங்கம், வெள்ளி அதிரடி சரிவு.. வாங்கலாம் மக்களே..!

Gold rates today in Delhi, Chennai - 18 August 2022

author-image
WebDesk
New Update
Gold, Silver Prices Today; 18August 2022,

தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4838 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.38704க்கு விற்கப்படுகிறது. நேற்று கிராம் தங்கம் ரூ.4849 எனவும் சவரன் ரூ.38792 எனவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஆக தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.11 ஆகவும் சவரனுக்கு ரூ.88 ஆகவும் குறைந்துள்ளது. 24 காரட் 99.99 தூயத் தங்கம் கிராம் ரூ.5240 ஆகவும் சவரன் ரூ.41920 ஆகவும் உள்ளது.

Advertisment

டெல்லி நிலவரம்

டெல்லியை பொறுத்தவரை 10 கிராம் ஆபரணத் தங்கம் ரூ.52393 ஆகவும் வெள்ளி விலை கிலோ ரூ.58213 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் தங்கம் தொடர்ந்து அதிகரித்து வந்தது.

இந்நிலையில் கடந்த இரு நாள்களாக தங்கத்தின் விலையில் வீழ்ச்சி காணப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஏற்பட்ட சுணக்கம் காரணமாக இந்த விலை வீழ்ச்சி என பொருளாதார அறிஞர்கள் கூறுகின்றனர்.

வெள்ளி விலை

சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 90 காசுகள் குறைந்து கிராம் ரூ.62.40 என நிர்ணயிக்கப்பட்டு கிலோ பார் வெள்ளி ரூ.62400 ஆக விற்பனையாகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை இடத்துக்கு இடம் சற்று மாறுபடும். இதற்கு மாநில வரி மற்றும் போக்குவரத்து செலவினங்கள் காரணமாக கூறப்படுகிறது.

சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை. பெட்ரோல் லிட்டர் ரூ.102.63 எனவும் டீசல் ரூ.94.24 எனவும் விற்பனையாகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gold Rate Gold Investment
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment