Advertisment

நகை பிரியர்களுக்கு ஷாக் கொடுக்கும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் இதுதான்!

வாரத்தின் தொடக்க நாளான நேற்று தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. அதன்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து காணப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Gold rates today, 18 July 2023 in Chennai Tamil News

24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 6,055 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் 48,440 ரூபாய் ஆகவும் விற்பனையாகிறது. (சென்னை தங்கம் விலை நிலவரம் 18 ஜூலை 2023)

Gold, Silver Rates Today News Updates in tamil: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மாதம் முதல் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இதே நிலை தான் கடந்த வாரத்திலும் நீடித்தது. தற்போது இந்த வாரத்திலும் அதேபோல் தான் நடக்கிறது. வாரத்தின் தொடக்க நாளான நேற்று தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து காணப்பட்டது.

Advertisment

ஆனால், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 உயர்ந்து ஒரு கிராம் 5,550 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,400 ஆகவும் விற்பனையாகிறது.

24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 6,055 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் 48,440 ரூபாய் ஆகவும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.81.40 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.81,400ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Gold Rate Business Tamil Business Update Gold Business Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment