அப்படியே சரிந்து போன தங்கம் விலை… நகைப் பிரியர்களுக்கு 'சூப்பர்' வாய்ப்பு!

சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 அதிரடியாக உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 44,560-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 அதிரடியாக உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 44,560-க்கு விற்பனை செய்யப்பட்டது.

author-image
WebDesk
New Update
Gold Silver Price Today 07 March 2024 CHENNAI in Tamil

சென்னையில் இன்று 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,016 ஆகவும், ஒரு சவரன் ரூ. 48,136 ஆகவும் விற்பனையாகிறது.

இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 அதிரடியாக உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 44,560-க்கும், ஒரு கிராம் ரூ. 5,570-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Advertisment

இந்த நிலையில், இன்று தங்கம் விலை அப்படியே அதிரடியாக சரிந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.44,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ. 5,550-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,016 ஆகவும், ஒரு சவரன் ரூ. 48,136 ஆகவும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை

Advertisment
Advertisements

நேற்று வெள்ளி விலையும் கிராமுக்கு அதிரடியாக ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.81.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.81,000ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று வெள்ளி விலை 70 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.30 -க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 80,300 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Chennai Gold Rate Business Gold

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: