scorecardresearch

கிராமுக்கு கொஞ்சமா கூடிய தங்கம்.. ஆறுதல் அளிக்கும் வெள்ளி

Gold rates today in Delhi, Chennai, Kolkata, Mumbai – 20 August 2022

கிராமுக்கு கொஞ்சமா கூடிய தங்கம்.. ஆறுதல் அளிக்கும் வெள்ளி
Gold rates today, 20 August 2022

சென்னையில் ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கம் ரூ.4,830 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் (8 கிராம்) ரூ.38,640 ஆக உள்ளது.
24 காரட் 99.99 தூயத் தங்கத்தை பொறுத்தவரை கிராமுக்கு ரூ.5,232 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.41,856 ஆக காணப்படுகிறது.

ஆறுதல் அளிக்கும் வெள்ளி
இது நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் கிராமுக்கு ரூ.8ம், சவரனுக்கு ரூ.64ம் அதிகமாகும். இந்த மாதத்தில் ஆகஸ்ட் 13ஆம் தேதி ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.4,914 ஆக அதிகரித்து காணப்பட்டது.
வெள்ளியை பொறுத்தமட்டில் கிராம் ரூ.61.30 ஆக இன்று (ஆகஸ்ட் 20) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது நேற்றைய விலையை காட்டிலும் கிராமுக்கு 0.70 காசுகள் குறைந்துள்ளது.
ஆகஸ்ட் 13ஆம் தேதி வெள்ளி கிராம் ரூ.64.80 ஆக இருந்தது. இந்த நிலையில் இன்று கிலோ பார் வெள்ளி ரூ. 61,300 ஆக விலை உள்ளது. ஆக கடந்த 7 நாள்களில் கிலோ வெள்ளி ரூ.3,500 வரை குறைந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இன்றி தொடர்கிறது. பெட்ரோல் லிட்டர் ரூ.102.63 எனவும் டீசல் லிட்டர் ரூ.94.24 எனவும் விற்பனையாகிறது.

\“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Gold rates today 20 august 2022 the gold rate in chennai rs8 per gram increased in today