Advertisment

மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் இதுதான்!

இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ. 44,880-க்கு விற்பனையாகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Gold Silver Price Today  13 February 2024 CHENNAI in Tamil

சென்னையில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 6,120 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் 48,960 ரூபாய் ஆகவும் விற்பனையாகிறது. (சென்னை தங்கம் விலை நிலவரம் 20 ஜூலை 2023)

Gold, Silver Rates Today News Updates in tamil: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று அதிரடியாக அதிகரித்துள்ளது.

Advertisment

வாரத்தின் தொடக்க நாளான திங்கள் கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிரடியாக குறைந்தது. ஆனால், நேற்று முன்தினம் செவ்வாய் கிழமை அப்படியே மீண்டும் சவரனுக்கு ரூ.112 உயர்ந்தது. இதேபோல் நேற்றும் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.320 உயர்ந்து 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ. 44,720-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.5,590-க்கு விற்பனையாகியது.

publive-image

இந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ. 44,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.5,610-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 6,120 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் 48,960 ரூபாய் ஆகவும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை

தங்கம் போல் வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசுகள் உயர்ந்து 82,40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 82,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold Rate Business Business Update 2 Tamil Business Update Gold Gold Selling
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment