gold price today chennai in tamil: கடந்த செவ்வாய் கிழமை (ஜூன் 14) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 95 ரூபாய் அதிரடியாகக் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 4,740க்கு விற்பனை செய்யப்பட்டது.
Gold rates today in tamil: உக்ரைன் மீதான ரஷ்யாவின் படைப்பு உலகம் முழுதும் பொருளாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய், தங்கம் போன்றவற்றின் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. மேலும், பங்குச்சந்தைகள் சரிந்து வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால், உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தில் தங்கள் முதலீடுகளை செய்து வருகின்றனர். இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்த வண்ணம் இருக்கிறது.
Advertisment
அவ்வகையில், தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. தங்கத்தின் விலை இம்மாத தொடக்கத்தில் அதாவது, ஜூன் 1ஆம் தேதி அன்று சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 37,920 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால் மறுநாளே ரூபாய்.160 உயர்ந்து, சவரன் 38,080 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை (ஜூன் 14) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 95 ரூபாய் அதிரடியாகக் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 4,740க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு 760 ரூபாய் அதிரடியாகக் குறைந்து 37,920 ரூபாயக்கு விற்பனையானது. இதேபோல், மறுநாள் புதன்கிழமை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து விற்பனையானது. அதன்படி சென்னையில், கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து 4,715க்கும், சவரன் 37,720ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஆனால், அதன் பிறகான நாட்களில் தங்கத்தின் விலை அதிகரித்த வண்ணம் தான் இருக்கிறது. அவ்வகையில், சென்னையில் இன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,775 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 80 ரூபாய் உயர்ந்து 38,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி விற்பனையாகி வருகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று 66.30 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளி 66,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்றும் அதே விலைக்கு விற்பனையாகி வருகிறது.