Advertisment

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்…. அப்படியே குறைந்த தங்கம் விலை!

நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ. 44,880-க்கு விற்பனை செய்யப்பட்டது.

author-image
WebDesk
New Update
Gold Silver Price journey last one year Tamil News

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.5,570-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold, Silver Rates Today News Updates in tamil: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

Advertisment

வாரத்தின் தொடக்க நாளான திங்கள் கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிரடியாக குறைந்தது. ஆனால், செவ்வாய் கிழமை அப்படியே மீண்டும் சவரனுக்கு ரூ.112 உயர்ந்தது. இதேபோல் புதன்கிழமை சவரனுக்கு 320 ரூபாயும், நேற்று வியாழக்கிழமை 160 ரூபாயும் என அதிரடியாக உயர்ந்தது.

நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ. 44,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.5,610-க்கு விற்பனையாகியது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை அப்படியே குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ. 44,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.5,570-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 6,076 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் 48,608 ரூபாய் ஆகவும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை

இதுபோல் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசுகள் குறைந்து ரூ.82-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 82,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Gold Rate Business Business Update 2 Tamil Business Update Gold Gold Selling
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment