Gold, Silver Prices Today: ரஷ்யா - உக்ரைன் போர், அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி உயர்வு, இந்தியாவின் தங்கம் மீதான வரி போன்ற காரணங்களால் நாட்டில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாகவும் தங்கம் விலை ஆட்டம் காட்டி வருகிறது.
வாரத்தின் தொடக்க நாளான திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிரடியாக குறைந்தது. ஆனால், செவ்வாய் கிழமை அப்படியே மீண்டும் சவரனுக்கு ரூ.112 உயர்ந்தது. இதேபோல் புதன்கிழமை சவரனுக்கு 320 ரூபாயும், வியாழக்கிழமை 160 ரூபாயும் என அதிரடியாக உயர்ந்தது. இந்நிலையில், நேற்று தங்கம் விலை அப்படியே குறைந்தது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ. 44,560-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், தங்கம் விலை இன்றும் மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,555-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 6,060 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் 48,480 ரூபாய் ஆகவும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை
இதேபோல் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.50 குறைந்து ரூ.80.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.80,500 விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil