தங்கம் விலை கடந்த 10 நாள்களில் கிட்டத்தட்ட ரூ.1,000 வரை சரிவை கண்டுள்ளது. இன்று மட்டும் கிராமுக்கு ரூ.15 வீழ்ச்சி கண்டு, சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.
சென்னையில் இன்று ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4,800 ஆக நிர்ணயிக்கப்பட்டு, சவரன் ரூ.38,400 ஆக விற்பனையாகிறது.
24 காரட் 99.99 தூயத் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.5,202 என நிர்ணயமாகி, சவரன் ரூ.41,616 ஆக உள்ளது.
சரியாக 10 தினங்களுக்கு முன்பு 24 காரட் தூயத் தங்கம் கிராம் ரூ.5,316 எனவும் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4,914 எனவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் கடந்த 10 நாள்களில் கிராமுக்கு ரூ.114 குறைந்து சவரனுக்கு ரூ.912 வரை குறைந்துள்ளது.
வெள்ளி விலை
வெள்ளியை பொறுத்தமட்டில் கடந்த 10 நாள்களில் கிராமுக்கு ரூ.3.10 காசுகள் குறைந்துள்ளது. தற்போது கிராம் வெள்ளி ரூ.60.70 என நிர்ணயிக்கப்பட்டு கிலோ பார் வெள்ளி ரூ.60,700 ஆக உள்ளது.
ஆக.14ஆம் தேதி வெள்ளி கிராமுக்கு ரூ.64.80 என உயர்ந்து கிலோ ரூ.64800 ஆக இருந்தது. பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை. பெட்ரோல் லிட்டர் ரூ.102.63 எனவும், டீசல் லிட்டர் ரூ.94.24 எனவும் விற்பனையாகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”