Advertisment

கொஞ்சமா கூடிய தங்கம், வெள்ளி.. இன்றைய நிலவரம்

Gold rates today in Delhi, Chennai, Kolkata, Mumbai - 24 August 2022

author-image
WebDesk
New Update
Gold rates today, 24 August 2022

இன்று, 24 ஆகஸ்ட் 2022 தங்கம் விலை

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.60.90 என நிர்ணயிக்கப்பட்டு கிலோ பார் வெள்ளி ரூ.90,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் வெள்ளி கிராமுக்கு 0.20 காசுகள் உயர்ந்துள்ளது.
நேற்று வெள்ளி கிராம் ரூ.60.70 ஆக விற்பனையானது. தங்கத்தை பொறுத்தமட்டில் கிராம் ரூ.5 அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4805 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.38440 ஆக உள்ளது.

Advertisment

ஆக சவரனுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது. 24 காரட் 99.99 தூயத் தங்கம் கிராம் ரூ.5207 எனவும் சவரன் ரூ.41656 ஆகவும் உள்ளது. சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட உயர்வு காரணமாக இன்று தங்கம் விலை சற்று அதிகரித்து காணப்படுகிறது.
டெல்லியில் 10 கிராம் ஆபரணத் தஙகம் ரூ.157 அதிகரித்து ரூ.51,707 ஆக உள்ளது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.364 உயர்ந்து, ரூ.55,662 ஆக உள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் ஒரு அவுன்ஸ் 1739 அமெரிக்க டாலராகவும், வெள்ளி ஒரு அவுன்ஸ் 19.03 அமெரிக்க டாலராகவும் காணப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gold Rate Gold Gold Investment
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment