Advertisment

Gold, Silver Prices Today: நகைப் பிரியர்கள் அதிர்ச்சி… மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 136 உயர்ந்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Gold Rates Today 24 August 2023 Chennai in tamil

சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 5,982-க்கும், ஒரு சவரன் ரூ. 47,856-க்கும் விற்பனையாகியது.

Gold, Silver Prices Today in Chennai tamil: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக அதிகரித்துள்ளது.

Advertisment

கடந்த திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்தது. இதேபோல் மறுநாள் செவ்வாய்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்தது. நேற்று புதன்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ. 43,728-க்கும், கிராமுக்கு ரூ.6 உயர்ந்து ரூ.5,466-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 136 உயர்ந்து ரூ.43,864-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 உயர்ந்து ரூ.5,483-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 5,982-க்கும், ஒரு சவரன் ரூ. 47,856-க்கும் விற்பனையாகியது.

வெள்ளி விலை

தங்கம் போல் வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. வெள்ளியின் விலை ரூ.1.50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் 80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 80.000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Gold Rate Business Gold Gold Investment
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment