சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4,840 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இது கிராமுக்கு ரூ.10 குறைவாகும்.
24 காரட் 99.99 தூயத் தங்கத்தை பொறுத்தவரை ரூ.5,242 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சவரன் ரூ.41,936 ஆக உள்ளது. நேற்று (ஆக.24) தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதாவது கிராமுக்கு ரூ.45 வரையும், சவரனுக்கு ரூ.360 ஆகவும் உயர்வை கண்டது.
இந்த நிலையில் இன்று கிராமுக்கு ரூ.10 சரிவை கண்டுள்ளது. தேசிய தலைநகர் டெல்லியில் நேற்று 10 கிராம் தங்கம் ரூ.402 வரை உயர்ந்து, ரூ.51,895 என விற்பனையானது. வெள்ளியும் கிலோ ரூ.711 வரை உயர்ந்து ரூ.56191 என காணப்பட்டது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 1763 அமெரிக்க டாலராகவும், வெள்ளி விலை ஒரு அவுன்ஸ் 19.35 அமெரிக்க டாலராகவும் காணப்பட்டது.
வெள்ளி விலை
சென்னையில் வெள்ளி விலையை பொறுத்தமட்டில் நேற்று மீண்டும் சட்டென உச்சத்துக்கு சென்றது. கிட்டத்தட்ட 60 காசுகள் வரை உயர்ந்து விற்பனையானது.
இம்மாதத்தில் ஆகஸ்ட் 22ஆம் தேதி வெள்ளி கிராமுக்கு ரூ.61.10 காசுகள் என நிர்ணயிக்கப்பட்டு கிலோ பார் வெள்ளி ரூ.61,100 என இருந்தது.
இந்த நிலையில் இன்று கிராம் வெள்ளி ரூ.61.30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது நேற்யைய விலையுடன் ஒப்பிடுகையில் 20காசுகள் குறைவாகும். தற்போது கிலோ வெள்ளி ரூ.61,300 ஆக உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை
கடந்த மாதத்தைப் போல் இம்மாதமும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. பெட்ரோல் லிட்டர் ரூ.102.63 எனவும், டீசல் லிட்டர் ரூ.94.24 எனவும் விற்பனையாகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil