Today Gold Rate: தங்கம் ரஷ்ய இறக்குமதிக்கு தடை? எந்தெந்த நகரங்களில் இன்று என்ன விலை?
Gold, Silver Rates Today News Updates in tamil: உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பைக் கண்டித்து, அந்நாட்டில் இருந்து தங்கம் இறக்குமதிக்கு தடை விதிக்க மேற்கத்திய நாடுகள் திட்டமிட்டுள்ளன.
Gold, Silver Prices Today in Chennai tamil: ஜெர்மனியில் G7 உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டுள்ள மேற்கத்திய நாடுகள் உக்ரைன் மீதான படையெடுப்பைக் கருத்தில் கொண்டு, ரஷ்யாவில் இருந்து தங்கம் இறக்குமதி செய்வதை தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தடைக்கு அனைத்து உறுப்பு நாடுகளும் ஒப்புதல் தெரிவிக்கவில்லை என்றாலும், இந்த முன்னேற்றங்கள் தங்கத்தின் விலையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
Advertisment
பணவீக்கத்திற்கு எதிராகப் பயன்படுத்தப்படும் முக்கியமான பொருட்களில் தங்கமும் ஒன்றாக உள்ள நிலையில், இந்தியாவில் இன்றைய தங்கத்தின் விலை 10 கிராம் 22 காரட் தங்கம் ரூ.47,550 ஆகவும், 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.51,870 ஆகவும் விற்பனையாகி வருகிறது. இது நகரங்களுக்கு நகரம் மறுபடக்கூடியது ஆகும்.
அதன்படி, தலைநகர் டெல்லியில், 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.47,550 ஆகவும், 10 கிராம் 24 காரட் ரூ.51,870 ஆகவும் உள்ளது. நிதித் தலைநகரான மும்பையில், 10 கிராம் 22 காரட் தங்கம் ரூ.47,550 ஆகவும், 24 காரட் 10 கிராம் ரூ. 51, 870 ஆகவும் உள்ளது.
சென்னையில் தங்கம் விலை நிலவரம் என்ன?
சென்னையில் இன்று, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.4,770 ஆகவும், சவரனுக்கு ரூ. 80 அதிகரித்து ரூ.38, 160 ஆகவும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை நிலவரம்:-
நேற்று வெள்ளி கிராம் ஒன்றுக்கு ரூ.65.70 காசுகள் என்று விற்பனையாகிய நிலையில், இன்று 30 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.66க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிலோவுக்கு ரூ.300 அதிகரித்து ஒரு கிலோ வெள்ளி ரூ.66,000க்கு விற்பனையாகி வருகிறது.