/tamil-ie/media/media_files/uploads/2022/08/tamil-indian-express-78.jpg)
Gold rates today, 29 august 2022
தங்கம் விலை இன்று கிராமுக்கு 35 சரிந்து சவரனுக்கு ரூ.280 வரை சரிந்து விற்பனையாகிறது.
சர்வதேச நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் வெள்ளி விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அந்த வகையில், இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.35 வரை சரிவை சந்தித்து கிராம் ரூ.4770 ஆக உள்ளது.
24 காரட் 99.99 தூயத் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.5172 ஆக நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.41376 ஆக உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இது உச்சப்பட்ச சரிவு ஆகும்.
வெள்ளி விலை
வெள்ளி விலையும் தன் பங்குக்கு அதிரடியாக விலை வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த காலங்களில் கிராம் ரூ.64 வரை விலை ஏற்றம் கண்டு இன்று கிராம் ரூ.60 ஆக உள்ளது. இதுவும் மாதத்தில் உச்சப்பட்ச சரிவு ஆகும்.
தற்போது கிலோ பார் வெள்ளி ரூ.60ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்று கிராம் ரூ.60.70 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆக கிலோவுக்கு ரூ.700 சரிந்துள்ளது. நாட்டின் மற்ற நகரங்களான பெங்களூருவில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4575 எனவும், டெல்லியில் ரூ.4803 எனவும் உள்ளது.
அந்த வகையில் 10 கிராம் தங்க நிலவரம்
- மும்பை ரூ.47,700
- கொல்கத்தா ரூ.47,150
- பெங்களூரு ரூ.47200
- ஹைதராபாத் ரூ.47150
- கேரளா ரூ.47150
- விஜயவாடா ரூ.47150
- பாட்னா ரூ.47180
- புனே ரூ.47180
- ஜெய்ப்பூர் ரூ.47300
- வதோதரா ரூ.47180
பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இன்றி தொடர்கிறது. பெட்ரோல் லிட்டர் ரூ.10.63 ஆகவும், டீசல் லிட்டர் ரூ.94.24 ஆகவும் தொடர்கிறது. தங்கம் மற்றும் வெள்ளி மாநில வரி மற்றும் போக்குவரத்து செலவினங்கள் காரணமாக இடத்துக்கு இடம் வேறுபடுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.