Today Gold, Silver Rate: தங்கம், வெள்ளி விலை சரிவு; எந்தெந்த ஊர்களில் என்ன ரேட்?

Gold Price Today, Gold Price Outlook, Gold Price Forecast in tamil: தலைநகர் டெல்லியில், 10 கிராம் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.47,650 ஆகவும், 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.51,980 ஆகவும் விற்பனையாகிறது.

Gold Price Today, Gold Price Outlook, Gold Price Forecast in tamil: தலைநகர் டெல்லியில், 10 கிராம் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.47,650 ஆகவும், 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.51,980 ஆகவும் விற்பனையாகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
 Gold Silver Price Today 01 July 2024 CHENNAI in Tamil

தங்கம், வெள்ளி விலை நிலவரம்

Gold, Silver Prices Today in Chennai tamil: உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு, ஜி – 7 உச்சி மாநாட்டில் ரஷ்ய தங்கத்தின் மீதான இறக்குமதிக்கு விதிப்பட்டுள்ள தடை பதற்றம், அமெரிக்காவின் முதல் காலாண்டு ஜிடிபி தரவு வெளியீடு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இழப்பு, அடுத்த வாரம் நடைபெற இருக்கும் கச்ச எண்ணெய் விலையை நிர்ணயிக்கும் ஓபேக் கூட்டம் ஆகியவை தங்கத்தின் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதனால், கடந்த சில மாதங்களாக தங்கம் விலையில் திடீர் ஏற்றமும், அதிரடியான இறக்கமுமாக இருந்து வருகிறது.

Advertisment

இந்நிலையில், இந்தியாவில் இன்று (ஜூன் 29 ஆம் தேதி) தங்கம் விலை நிலையானதாக இருக்கிறது. அதன்படி, தங்கத்தின் விலை 10 கிராம் 22 காரட் தங்கத்திற்கு ரூ.47,650 ஆகவும், 24 காரட் 10 கிராமுக்கு ரூ.51,980 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இது இந்தியாவில் உள்ள நகரங்களுக்கு நகரம் மாறுபடும்.

publive-image

அந்த வகையில், தலைநகர் டெல்லியில், 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.47,650 ஆகவும், 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.51,980 ஆகவும் விற்பனையாகிறது. நிதித் தலைநகரான மும்பையில், 22 காரட் 10 கிராம் தங்கம் ரூ.47,650 ஆகவும், 24 காரட் 10 கிராமுக்கு ரூ. 51, 980 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Advertisment
Advertisements

அண்டை மாநிலமான கேரளாவில் 10 கிராம் 22 காரட் தங்கம் ரூ.47,650 ஆகவும், 10 கிராம் 24 காரட் தங்கம் ரூ.51,980 ஆகவும் விற்பனையாகிறது. கர்நாடகாவின் பெங்களூரு, மங்களூரு, ஆந்திராவின் விசாகப்பட்டினம் போன்ற நகரங்களிலும் இதே விலையில் தான் தங்கம் விற்பனையாகி வருகிறது.

சென்னையில் தங்கம் விலை நிலவரம்:-

publive-image

சென்னையில் நேற்று முன்தினம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.4,770 ஆகவும், சவரனுக்கு ரூ. 80 அதிகரித்து ரூ.38, 160 ஆகவும் விற்பனையாகியது. மேலும், 22 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.47,700 ஆகவும், 24 காரட் 10 கிராமுக்கு ரூ.52,030 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

publive-image

ஆனால், நேற்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய முன்தினம் விற்பனையான அதே விலையில் தங்கம் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.87 குறைந்து ரூ.4,683 ஆகவும், சவரனுக்கு ரூ. 696 குறைந்து ரூ.37, 464 ஆகவும் விற்பனையாகியது. மேலும், 22 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.46,830 ஆகவும், 24 காரட் 10 கிராமுக்கு ரூ.51,090 ஆகவும் விற்பனை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை நிலவரம்:-

நேற்று வெள்ளி கிராம் ஒன்றுக்கு ரூ 40 காசுகள் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.65.60 காசுக்கு விற்பனையாகியது. ஒரு கிலோவுக்கு ரூ.400 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.65,600க்கு விற்பனையாகியது.

publive-image

இந்நிலையில், இன்றும் வெள்ளி விலை குறைந்துள்ளது. அதன்படி, வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.65.30 காசு ஆகவும், ஒரு கிலோவுக்கு ரூ.300 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.65,300க்கு விற்பனையாகியது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Gold Rate Business Tamil Business Update Gold Gold Investment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: