சென்னையில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,038 ஆகவும், ஒரு சவரன் ரூ. 48,304 ஆகவும் விற்பனையாகிறது. (சென்னை தங்கம் விலை நிலவரம் 3 ஆகஸ்ட் 2023)
Gold, Silver Prices Today in Chennai Tamil: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 அதிரடியாக உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 44,560-க்கும், ஒரு கிராம் ரூ. 5,570-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
Advertisment
ஆனால், நேற்று புதன்கிழமை தங்கம் விலை அப்படியே அதிரடியாக சரிந்தது. சவரனுக்கு ரூ.160 குறைந்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.44,400-க்கும், கிராம் ரூ. 5,550-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று ஆடிப்பெருக்கை ஒட்டி தங்கம் விலை அதிரடியாக சரிந்துள்ளது.
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,535-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Advertisment
Advertisements
24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,038 ஆகவும், ஒரு சவரன் ரூ. 48,304 ஆகவும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையும் இன்று அதிரடியாக குறைந்துள்ளது. வெள்ளியின் விலை 1.80 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.78.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.78,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil