இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை ஓணம் பண்டிகையை ஒட்டி தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 அதிரடியாக உயர்ந்தது. இதேபோல், நேற்றும் தங்கத்தின் விலை அதிகரித்தது. சவரனுக்கு ரூ.80 உயர்ந்து தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.44,240-க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து 5,530-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
Advertisment
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 44,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து 5,545-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.6,049-க்கும், ஒரு சவரன் ரூ. 48,392-க்கும் விற்பனையாகியது.
தங்கம் விலை கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக, அதவது ஆகஸ்ட் 22ம் தேதி அன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை ரூ. 5,460 ஆகவும், ஒரு கிராம் 24 கேரட் ஆபரணத்தங்கம் தங்கம் ரூ. 5,956-க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பித்தக்கது.
வெள்ளி விலை
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.80. 70 -க்கும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.80,700 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“