சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ. 5,535-க்கும், ஒரு சவரன் ரூ. 44,280 -க்கும் விற்பனையாகிறது. (சென்னை தங்கம் விலை நிலவரம் - 4 ஆகஸ்ட் 2023)
Gold price today in Chennai: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இந்நிலையில், நேற்று ஆடிப்பெருக்கை ஒட்டி தங்கம் விலை அதிரடியாக சரிந்தது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44,280-க்கும், கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,535-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
Advertisment
இந்த நிலையில், இன்று தங்கம் விலை மாற்றம் இல்லாமல் விற்பனையாகிறது. எதிர்வரும் நாட்களில் பண்டிகைகள், சுபமுகூர்த்த தினங்கள் அடுத்தடுத்து வருவதால் தங்கம் வாங்க இன்று சிறப்பான நாளாக அமைத்துள்ளது. இது நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகவும் அமைந்துள்ளது.
இன்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் 5,535 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் ரூ. 44,280 ஆகவும் விற்பனையாகிறது. 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,038-க்கும், ஒரு சவரன் ரூ. 48,304 -க்கும் விற்பனையாகிறது.
Advertisment
Advertisements
வெள்ளி விலை
வெள்ளி விலையைப் பொறுத்தவரை, கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.20 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,200ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil