Advertisment

கிராமுக்கு ரூ.24 அதிகரிப்பு: இன்றைய தங்கம் விலை நிலவரம்

டெல்லியிலும் தங்கத்தின் விலை அதிகரித்து காணப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
invest in gold this festive season

தங்க பரிமாற்ற வர்த்தக நிதிகள், தனிநபர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய அனுமதிக்கின்றன. இவை, பங்குகளைப் போல் பங்குச் சந்தையில் வாங்கவும் விற்கவும் முடியும்.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.24 அதிகரித்து ரூ.4914 ஆக நிர்ணயிக்கப்பட்டு ஒரு சவரன் ரூ.39312 ஆக விற்பனையாகிறது.

Advertisment

publive-image

24 காரட் 99.99 தூயத் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.5316 ஆகவும் ஒரு சவரன் ரூ.42528 ஆகவும் உள்ளது. ஆக, நேற்றைய (ஆக.12) விலையுடன் ஒப்பிடுகையில் இது கிராமுக்கு ரூ.24ம், சவரனுக்கு ரூ.192ம் அதிகரித்துள்ளது.

வெள்ளி விலை

வெள்ளியை பொறுத்தமட்டில் கிராமுக்கு ரூ.80 பைசா அதிகரித்து கிலோவுக்கு ரூ.800 அதிகரித்து விற்பனையாகிறது. இம்மாதத்தில் கடந்த 8ஆம் தேதி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.63ஆகவும் கிலோ பார் வெள்ளி ரூ.63 ஆயிரமாகவும் காணப்பட்டது.

மற்ற நகரங்களில் தங்கத்தின் விலை

இந்த நிலையில் தேசிய தலைநகர் டெல்லியிலும் தங்கத்தின் விலை அதிகரித்து காணப்பட்டது. டெல்லி மட்டுமின்றி மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களிலும் 10 கிராம் 22 கிராம் ஆபரணத் தங்கம் ரூ.47750 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் ரூ.400 அதிகமாகும். எனினும் இந்த நகரங்களில் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.400 குறைந்துள்ளது. தற்போது வெள்ளி விலை ரூ.58500 ஆக உள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ttps://t.me/ietamil"

Gold Rate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment