scorecardresearch

நீங்க கொடுக்கும் பணத்திற்கு இன்றைய விலையில் தங்கம்… இந்த சேமிப்பு திட்டத்தை ட்ரை பண்ணுங்க!

வீட்டுல நகையா சேமிச்சு வச்சா அத பாதுகாக்குறது ஒரு பெரிய கவலை. அதே நேரத்துல ஒரு கிராம் இன்ன விலைன்னு ஒரு செய்திய கேட்டுட்டு நாம கடை கடையா ஏறி இறங்குனா செய்கூலி இவ்வளவு, சேதாரம் இவ்வளவுன்னு கொஞ்சம் கொஞ்சமா சேத்து வச்ச காச மொத்தமா கொண்டு போய் நகைக்கடை காரங்க கைல கொடுப்போம்

நீங்க கொடுக்கும் பணத்திற்கு இன்றைய விலையில் தங்கம்… இந்த சேமிப்பு திட்டத்தை ட்ரை பண்ணுங்க!

Gold Savings Account : தங்கம் என்னைக்குமே ஒரு பாதுகாப்பான முதலீட்டு திட்டமாக நம் அனைவராலும் பாக்கப்படுது. ஏன்ன்னு கேட்டே ஒரு இக்கட்டான சூழல் வரும் போது யாரு கிட்டயும் கடன் வாங்காம நேரடியா போய் அடமானம் வைக்க ஏதுவான ஒரு சொத்தாவே நாம இத பாக்குறோம். ஆனாலும் கூட அளவுக்கு அதிகமா வீட்டுல நகையா சேமிச்சு வச்சா அத பாதுகாக்குறது ஒரு பெரிய கவலை. அதே நேரத்துல ஒரு கிராம் இன்ன விலைன்னு ஒரு செய்திய கேட்டுட்டு நாம கடைக்கு ஏறி இறங்குனா செய்கூலி இவ்வளவு, சேதாரம் இவ்வளவுன்னு கொஞ்சம் கொஞ்சமா சேத்து வச்ச காச மொத்தம கொண்டு போய் நகைக்கடை காரங்க கைல கொடுப்போம். நகை வாங்க போகும் போது இது என்னவோ தனி மொய்யா தான் போய் சேரும். இப்படி பல்வேறு இக்கட்டுல இருந்து தப்பிக்கத்தான் அரசாங்கம் இப்போது தங்க சேமிப்பு கணக்கு என்ற ஒரு திட்டத்த அறிமுகம் செஞ்சுருக்கு.

ஆங்கிலத்துல இது Gold Savings Account-ன்னு சொல்றாங்க… இது செய்கூலி, சேதாரம், இன்னபிற பிக்கல் பிடுங்கல் செலவுகள்ல இருந்து நம்ம எல்லாரையும் பாதுகாக்குது. இதுல நீங்க மொதலீடு செய்யணும்னா, நீங்க தெரிஞ்சு வச்சுருக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் என்ன? அதைத்தான் நாம இந்த கட்டுரைல படிச்சு தெரிஞ்சுக்க போறோம்.

நாம எப்படி நம்மளோட பணத்த சேவிங்க்ஸ் டெபாசிட் பண்றோமோ அப்படியே இந்த தங்க சேமிப்பு திட்டத்துல பணம் டெபாசிட் செஞ்சுக்கலாம். Sovereign Gold Bond (SGB) போன்ற மத்த தங்க சேமிப்பு திட்டம் போல இன்ன தேதி இன்ன கிழமைல வாங்கணும்னு அவதி கிடையாது. உங்களுக்கு விருப்பமான நேரத்துல, விருப்பமான தேதில கைல காசு இருக்கும் போது ஒரு கிராம் தங்கத்தோட இன்னைக்கு மதிப்பு என்னவோ அந்த மதிப்ப, பண முதலீடா வங்கிகள்ல கொண்டு போய் டெபாசிட் பண்ணலாம். ஒரு கிராம் தங்கத்திற்கான பணம் தான் அடிப்படை. இந்த அடிப்படைல நீங்கள் 10 கிராம் தங்கத்துக்கான பணத்தையும் கூட உங்க கணக்குல போட்டுக்கலாம்.

நீங்க என்ன தான் பணமா முதலீடு செய்தாலும் உங்க சேமிப்பு கணக்கு புத்தகத்துல இது தங்கமா தான் வரவு வைக்கப்படுது. அரசாங்கத்தின் திட்டம் என்பதால் தங்கத்தின் தூய்மை மற்றும் பாதுகாப்பு பத்தின கவலை ஏதும் உங்களுக்கு வேண்டாம்.

திரும்பி எடுக்கும் போது, எந்த நாள்ல பணத்தை எடுக்கிறீங்களோ, அந்த தேதிக்கு விற்கப்படும் தங்கத்தின் விலையில் தங்கமாகவோ அல்லது அதற்கு நிகரான பணமாகவோ, ஒரு கிராம் தங்கம் என்ற அடிப்படையில் நீங்க திரும்பி பெற்றுக் கொள்ளலாம்.

வங்கிகள் GMS-ன் கீழ் ஏற்றுக்கொள்ளப்படும் வைப்புத்தொகைகளுக்கு எந்த விகிதத்தில் வட்டிகள் தருகின்றார்களோ அதே விகிதத்தில் நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கும் மாதந்தோறும் வட்டிப் பணம் உங்களின் தங்க சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படும்.

தங்க சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்த பணத்தை தங்கமாக திருமப் பெறும் போது நீங்கள் கேபிட்டல் கெய்ன் டேக்ஸ் என்ற வரியை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இது தவிர, தங்கத்தை வாங்குவதற்கான கட்டணங்களைச் சேமிப்பது மற்றும் லாக்கரில் தங்கத்தைப் பாதுகாப்பாக வைக்க தர்ற பணத்தை மிச்சப்படுத்துறதோடு நாம முதலீடு செய்யும் தங்கத்திற்கு வட்டியும், வரி விலக்கும் கிடைக்கும் என்பதால் பலரும் இந்த திட்டம் குறித்து யோசனை செய்து வருகிறார்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Gold savings account how gsa will make investments in gold easy safe and rewarding