Advertisment

ரூ.360 வரை சரிவு: தங்கம் வாங்க தங்கமான நேரம்!

இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலையில் ஏற்ற இறம் காணப்பட்ட நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Gold Silver Price in Chennai

Gold Silver Price in Chennai - 15th June 2023

Gold, Silver Rates Today News Updates in tamil: சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம் மே மாதம் 4-ம் தேதி ரூ.46,000 என்ற புதிய உச்சத்தை எட்டியது. அதனைத் தொடர்ந்து பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது.

Advertisment

இந்த (ஜூன்) மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலையில் ஏற்ற இறம் காணப்பட்ட நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

சென்னையில் நேற்று 24 காரட் தங்கம் கிராம் ரூ.6010 -க்கும், சவரன் ரூ.48,080-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று 24 காரட் தங்கம் கிராம் ரூ.5965-க்கும் சவரன் ரூ.47,720-க்கும் விற்பனையாகி வருகிறது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.5505-க்கும், சவரன் 44,04-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு ரூ.1 வீதம் அதிரடியாக சரிந்து கிலோ பார் வெள்ளி ரூ.77 ஆயிரத்து 500 ஆக காணப்படுகிறது.

நேற்று, கிலோ வெள்ளி ரூ.78 ஆயிரத்து 500 ஆக காணப்பட்டது. ஆக இன்று கிலோவுக்கு ரூ.1000 சரிந்துள்ளது. எனினும் வெள்ளி விலை ஜூன் 11ஆம் தேதி ரூ.79700 வரை சென்றது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gold Rate Gold Gold Investment
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment