scorecardresearch

தொடர்ந்து 3-வது நாளாக தங்கம் விலை உயர்வு: சென்னையில் இன்று என்ன ரேட்?

நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இது கிராமுக்கு ரூ.10ம், சவரனுக்கு ரூ.80ம் அதிகரித்துள்ளது.

How Much Gold You Can Keep At Home
இந்தியாவை பொறுத்தமட்டில் தங்கம் பசுமையான முதலீடாக உள்ளது.

Gold Silver Price, Chennai: சென்னையில் திங்கள்கிழமை (ஏப்.29) ஆபரணத் தங்கம் கிராம் ரூ.5,630 எனவும் சவரன் ரூ.45,040 ஆகவும் விற்பனையாகி வருகிறது. நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இது கிராமுக்கு ரூ.10ம், சவரனுக்கு ரூ.80ம் அதிகரித்துள்ளது.

நேற்று ஒரு கிராம் தங்கம் கிராம் ரூ.5,620 ஆகவும், சவரன் ரூ.44,960ஆகவும் விற்பனையாகி வந்தது. தற்போது ஒரு கிராம் 24 காரட் தூயத் தங்கம் ரூ.6,097 ஆகவும், சவரன் ரூ.48,776 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் கிராமுக்கு 40 காசுகள் வீதம் அதிகரித்து, கிலோவுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. தற்போது ஒரு கிராம் வெள்ளி ரூ.80.40 ஆகவும் கிலோ ரூ.80,400 என்று விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த மூன்று நாட்களாக உயர்ந்து வரும் தங்கம் வெள்ளி விலையினால் மக்கள் மத்தியில் தயக்கம் நிலவுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Gold silver price in chennai 29th april 2023