scorecardresearch

வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.500 சரிவு: நகை வாங்க அரிய வாய்ப்பு!

24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,160 என சவரனுக்கு ரூ. 41,280 ஆக விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.500 சரிவு: நகை வாங்க அரிய வாய்ப்பு!
Gold Silver Rate in Delhi, Chennai – 2nd November

Gold, Silver Rates Today News Updates in Tamil, 2nd November: உலகச் சந்தைகளில், அமெரிக்க டாலர் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்ததைத் தொடர்ந்து தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

எரிசக்தி நெருக்கடி ஐரோப்பிய பொருளாதாரத்தை மந்தநிலைக்குள் தள்ளக்கூடும் என்கிற காரணத்தினால், யூரோ டாலருக்கு இணையாக மதிப்பு இருந்தது. டாலரின் வலிமை மற்ற நாணயங்களை வாங்குபவர்களுக்கு கிரீன்பேக்-விலை தங்கத்தின் விலையை உயர்த்துகிறது.

இந்தியாவில் தங்கம் வெள்ளி விலை:

இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பையில் இன்று தங்கம் விலை சீராக உள்ளது. 22 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ. 37,600 ஆக உள்ளது. இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்துள்ளது. 8 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ. 41,008 ஆக உள்ளது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை, டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய மூன்று நகரங்களிலும் இன்று விலை சீராக உள்ளது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ. 58,900 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இன்று வெள்ளியின் விலை கிலோவிற்கு ரூ.600 குறைந்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை:

தமிழகத்தில் இம்மாத தொடக்கம் முதல், தங்கம் விலையில் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. அதன்படி, இன்று சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ. 4,730 ஆகவும், சவரனுக்கு ரூ.37,840க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,160 என சவரனுக்கு ரூ. 41,280 ஆக விற்பனையாகிறது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.64.50க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோவுக்கு ரூ.64,500க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Gold silver price in delhi and chennai on 02nd november

Best of Express