Gold, Silver Rates Today News Updates in Tamil, 16th November: கடந்த சில நாட்களாக, தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் நகை வாங்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் மக்கள் இருக்கின்றனர்.
எரிசக்தி நெருக்கடி ஐரோப்பிய பொருளாதாரத்தை மந்தநிலைக்குள் தள்ளக்கூடும் என்கிற காரணத்தினால், யூரோ டாலருக்கு இணையாக மதிப்பு இருந்தது. டாலரின் வலிமை மற்ற நாணயங்களை வாங்குபவர்களுக்கு கிரீன்பேக்-விலை தங்கத்தின் விலையை உயர்த்துகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் உள்ள தலைநகரங்களில் தங்கம் வெள்ளி விலை நிலவரத்தை பற்றி காணலாம்:
இந்தியாவில் தங்கம் வெள்ளி விலை:
டெல்லி: இந்தியாவின் தலை நகரமான டெல்லியில் இன்று தங்கம் விலை சீராக உள்ளது. 22 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ. 38,520 ஆக உள்ளது. நேற்றைய விலையை விட இன்று ரூ. 160 அதிகரித்துள்ளது. 8 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ. 42,008 ஆக உள்ளது. நேற்றைய விலையை விட இன்று ரூ. 168 அதிகரித்துள்ளது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரை, டெல்லியில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ. 62,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிலோவிற்கு ரூ.700 குறைந்துள்ளது.
மும்பை: மும்பையில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 4,800 என்றும் சவரனுக்கு ரூ. 38,400 என்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று சவரனுக்கு ரூ. 160 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5,236 ஆகவும் சவரனுக்கு ரூ. 41,888 ஆகவும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று சவரனுக்கு ரூ. 168 அதிகரித்துள்ளது.
வெள்ளி விலையை பொறுத்தவரை, மும்பையில் இன்று ஒரு கிலோ ரூ. 62,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிலோவிற்கு ரூ.700 குறைந்துள்ளது.
கொல்கத்தா: கொல்கத்தாவில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 4,800 என்றும் சவரனுக்கு ரூ. 38,400 என்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று சவரனுக்கு ரூ. 160 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5,236 என்றும் சவரனுக்கு ரூ. 41,888 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று சவரனுக்கு ரூ. 168 அதிகரித்துள்ளது.
வெள்ளி விலையை பொறுத்தவரை, கொல்கத்தாவில் இன்று ஒரு கிலோ ரூ. 62,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிலோவிற்கு ரூ.700 குறைந்துள்ளது.
பெங்களூர்: பெங்களூரில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 4,805 என்றும் சவரனுக்கு ரூ. 38,440 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று சவரனுக்கு ரூ. 160 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5,241 என்றும் சவரனுக்கு ரூ. 41,928 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று சவரனுக்கு ரூ. 168 அதிகரித்துள்ளது.
வெள்ளி விலையை பொறுத்தவரை, பெங்களுருவில் இன்று ஒரு கிலோ ரூ. 67,500 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிலோவிற்கு ரூ. 1,000 குறைந்துள்ளது.
ஹைதெராபாத்: ஹைதெராபாதில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 4,800 என்றும் சவரனுக்கு ரூ. 38,400 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று சவரனுக்கு ரூ. 160 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5,236 என்றும் சவரனுக்கு ரூ. 41,888 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று சவரனுக்கு ரூ. 168 அதிகரித்துள்ளது.
வெள்ளி விலையை பொறுத்தவரை, இன்று ஒரு கிலோ ரூ. 67,500 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிலோவிற்கு ரூ. 1,000 குறைந்துள்ளது.
சென்னையில் தங்கம் விலை:
தமிழகத்தில் இம்மாத தொடக்கம் முதல், தங்கம் விலையில் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. அதன்படி, இன்று சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ. 4,960 ஆகவும், சவரனுக்கு ரூ.39,680க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,411 என சவரனுக்கு ரூ. 43,288 ஆக விற்பனையாகிறது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.68.50க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோவுக்கு ரூ.68,500க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.