scorecardresearch

சரிந்தது விலை… கார்த்திகை தினத்தன்று தங்கம் வாங்கும் இல்ல அரசிகள் மகிழ்ச்சி!

Gold Silver Price in Metropolitan Cities – 06th December: 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,465 என சவரனுக்கு ரூ. 43,720 ஆக விற்பனையாகிறது.

சரிந்தது விலை… கார்த்திகை தினத்தன்று தங்கம் வாங்கும் இல்ல அரசிகள் மகிழ்ச்சி!
Gold Silver Price in Metropolitan Cities – 06th December

Gold, Silver Rates Today News Updates in Tamil, 06th December: கடந்த இரண்டு நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை எந்த மாற்றமும் இல்லாமல் காணப்படுகிறது. ஒருசில பெருநகரங்களில் வெள்ளியின் விலை கிலோவிற்கு ரூ.1,700 சரிந்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக தங்கத்தில் விலை குறைந்துகொண்டிருந்தது. இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் தங்கம் வெள்ளியின் விலை சரிந்து வந்தாலும், சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இன்று சென்னையிலும் இந்தியாவின் மற்ற பெருநகரங்களிலும் தங்கம் வெள்ளியின் விலை என்ன என்பதை காணலாம்:

இந்தியாவில் தங்கம் வெள்ளி விலை:

டெல்லி: இந்தியாவின் தலை நகரமான டெல்லியில் இன்று தங்கம் விலை சீராக உள்ளது. ஒரு கிராம் ரூ.4,945 என்று, 22 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ. 39,560 ஆக உள்ளது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.30 சரிந்து, சவரனுக்கு ரூ.240 சரிந்துள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,393 என்று, சவரனுக்கு ரூ.43,144 ஆக விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.33 சரிந்து, சவரனுக்கு ரூ.264 சரிந்துள்ளது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை, டெல்லியில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ. 66,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.500 சரிந்துள்ளது.

மும்பை: மும்பையில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 4,930 என்றும் சவரனுக்கு ரூ. 39,440 என்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.30 சரிந்து, சவரனுக்கு ரூ.240 சரிந்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,378 ஆகவும் சவரனுக்கு ரூ. 43,024 ஆகவும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.33 சரிந்து, சவரனுக்கு ரூ.264 சரிந்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, மும்பையில் இன்று ஒரு கிலோ ரூ. 66,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.500 சரிந்துள்ளது.

கொல்கத்தா: கொல்கத்தாவில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 4,930 என்றும் சவரனுக்கு ரூ. 39,440 என்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.30 சரிந்து, சவரனுக்கு ரூ.240 சரிந்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5,378 என்றும் சவரனுக்கு ரூ. 43,024 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.33 சரிந்து, சவரனுக்கு ரூ.264 சரிந்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, கொல்கத்தாவில் இன்று ஒரு கிலோ ரூ.66,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.6,500 சரிந்துள்ளது.

பெங்களூர்: பெங்களூரில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 4,935 என்றும் சவரனுக்கு ரூ. 39,480 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.30 சரிந்து, சவரனுக்கு ரூ.240 சரிந்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5,383 என்றும் சவரனுக்கு ரூ. 43,064 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.33 சரிந்து, சவரனுக்கு ரூ.264 சரிந்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, பெங்களுருவில் இன்று ஒரு கிலோ ரூ. 70,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.1,700 சரிந்துள்ளது.

ஹைதெராபாத்: ஹைதெராபாதில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 4,930 என்றும் சவரனுக்கு ரூ.39,440 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.30 சரிந்து, சவரனுக்கு ரூ.240 சரிந்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5,378 என்றும் சவரனுக்கு ரூ. 43,024 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.33 சரிந்து, சவரனுக்கு ரூ.264 சரிந்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, இன்று ஒரு கிலோ ரூ. 70,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.1,700 சரிந்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை:

தமிழகத்தில் இம்மாத தொடக்கம் முதல், தங்கம் விலையில் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. அதன்படி, இன்று சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.5,010 ஆகவும், சவரனுக்கு ரூ.40,080க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.35 சரிந்து, சவரனுக்கு ரூ.280 சரிந்துள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,465 என சவரனுக்கு ரூ. 43,720 ஆக விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.39 சரிந்து, சவரனுக்கு ரூ.312 சரிந்துள்ளது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.70.80க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோவுக்கு ரூ.70,800க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.1,700 சரிந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Gold silver price in metropolitan cities 06th december