Advertisment

வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.1,300 உயர்வு: தங்கம் விலை குறைந்ததா?

Gold Silver Price in Metropolitan Cities - 05th December: ஒருசில பெருநகரங்களில் வெள்ளியின் விலை கிலோவிற்கு ரூ.1,300 உயர்ந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Sovereign Gold Bond Scheme 2022-23 Series III Issue Price

சந்தா காலத்தில் பத்திரத்தின் வெளியீட்டு விலை ரூ.5,409 ஆக இருக்கும்.

Gold, Silver Rates Today News Updates in Tamil, 05th December: கடந்த இரண்டு நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை எந்த மாற்றமும் இல்லாமல் காணப்படுகிறது. ஒருசில பெருநகரங்களில் வெள்ளியின் விலை கிலோவிற்கு ரூ.1,300 உயர்ந்துள்ளது.

Advertisment

இந்தியாவில் கடந்த சில நாட்களாக தங்கத்தில் விலை குறைந்துகொண்டிருந்தது. இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் தங்கம் வெள்ளியின் விலை சரிந்து வந்தாலும், சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இன்று சென்னையிலும் இந்தியாவின் மற்ற பெருநகரங்களிலும் தங்கம் வெள்ளியின் விலை என்ன என்பதை காணலாம்:

publive-image

இந்தியாவில் தங்கம் வெள்ளி விலை:

டெல்லி: இந்தியாவின் தலை நகரமான டெல்லியில் இன்று தங்கம் விலை சீராக உள்ளது. ஒரு கிராம் ரூ.4,960 என்று, 22 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ. 39,680 ஆக உள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,410 என்று, சவரனுக்கு ரூ.43,280 ஆக விற்பனையாகிறது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை, டெல்லியில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ. 66,500 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.1,300 அதிகரித்துள்ளது.

மும்பை: மும்பையில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 4,945 என்றும் சவரனுக்கு ரூ. 39,560 என்று விற்கப்படுகிறது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,395 ஆகவும் சவரனுக்கு ரூ. 43,160 ஆகவும் விற்கப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, மும்பையில் இன்று ஒரு கிலோ ரூ. 66,500 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.1,300 அதிகரித்துள்ளது.

கொல்கத்தா: கொல்கத்தாவில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 4,945 என்றும் சவரனுக்கு ரூ. 39,560 என்று விற்கப்படுகிறது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5,395 என்றும் சவரனுக்கு ரூ. 43,160 என்றும் விற்கப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, கொல்கத்தாவில் இன்று ஒரு கிலோ ரூ.71,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

பெங்களூர்: பெங்களூரில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 4,950 என்றும் சவரனுக்கு ரூ. 39,600 என்றும் விற்கப்படுகிறது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5,400 என்றும் சவரனுக்கு ரூ. 43,200 என்றும் விற்கப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, பெங்களுருவில் இன்று ஒரு கிலோ ரூ. 71,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

ஹைதெராபாத்: ஹைதெராபாதில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 4,945 என்றும் சவரனுக்கு ரூ.39,560 என்றும் விற்கப்படுகிறது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5,395 என்றும் சவரனுக்கு ரூ. 43,160 என்றும் விற்கப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, இன்று ஒரு கிலோ ரூ. 71,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் தங்கம் விலை:

தமிழகத்தில் இம்மாத தொடக்கம் முதல், தங்கம் விலையில் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. அதன்படி, இன்று சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.5,016 ஆகவும், சவரனுக்கு ரூ.40,128க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,472 என சவரனுக்கு ரூ. 43,776 ஆக விற்பனையாகிறது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.71.60க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோவுக்கு ரூ.71,600க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gold Gold Investment Gold Rate Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment