அதிகரிக்கும் தங்கம்- வெள்ளி விலை: இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி தகவல்! | Indian Express Tamil

அதிகரிக்கும் தங்கம்- வெள்ளி விலை: இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி தகவல்!

Gold Silver Price in Metropolitan Cities – 09th December: 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,506 என சவரனுக்கு ரூ. 44,048 ஆக விற்பனையாகிறது.

அதிகரிக்கும் தங்கம்- வெள்ளி விலை: இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி தகவல்!
Gold Silver Price in Metropolitan Cities – 09th December

Gold, Silver Rates Today News Updates in Tamil, 09th December: கடந்த இரண்டு நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்து காணப்படுகிறது. ஒருசில பெருநகரங்களில் வெள்ளியின் விலை கிலோவிற்கு ரூ.1,400 அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக தங்கத்தில் விலை குறைந்துகொண்டிருந்தது. இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் தங்கம் வெள்ளியின் விலை சரிந்து வந்தாலும், சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இன்று சென்னையிலும் இந்தியாவின் மற்ற பெருநகரங்களிலும் தங்கம் வெள்ளியின் விலை என்ன என்பதை காணலாம்:

இந்தியாவில் தங்கம் வெள்ளி விலை:

டெல்லி: இந்தியாவின் தலை நகரமான டெல்லியில் இன்று தங்கம் விலை சீராக உள்ளது. ஒரு கிராம் ரூ.4,990 என்று, 22 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ. 39,920 ஆக உள்ளது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,444 என்று, சவரனுக்கு ரூ.43,552 ஆக விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.29 உயர்ந்து, சவரனுக்கு ரூ.232 உயர்ந்தது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை, டெல்லியில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ. 67,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.1,400 அதிகரித்துள்ளது.

மும்பை: மும்பையில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 4,975 என்றும் சவரனுக்கு ரூ. 39,800 என்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,428 ஆகவும் சவரனுக்கு ரூ. 43,424 ஆகவும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.28 உயர்ந்து, சவரனுக்கு ரூ.224 உயர்ந்தது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, மும்பையில் இன்று ஒரு கிலோ ரூ. 67,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.1,400 அதிகரித்துள்ளது.

கொல்கத்தா: கொல்கத்தாவில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 4,975 என்றும் சவரனுக்கு ரூ. 39,800 என்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5,428 என்றும் சவரனுக்கு ரூ. 43,424 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.28 உயர்ந்து, சவரனுக்கு ரூ.224 உயர்ந்தது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, கொல்கத்தாவில் இன்று ஒரு கிலோ ரூ.67,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.1,400 அதிகரித்துள்ளது.

பெங்களூர்: பெங்களூரில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 4,980 என்றும் சவரனுக்கு ரூ. 39,840 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5,433 என்றும் சவரனுக்கு ரூ. 43,464 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.28 உயர்ந்து, சவரனுக்கு ரூ.224 உயர்ந்தது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, பெங்களுருவில் இன்று ஒரு கிலோ ரூ. 72,500 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.1,200 அதிகரித்துள்ளது.

ஹைதெராபாத்: ஹைதெராபாதில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 4,975 என்றும் சவரனுக்கு ரூ.39,800 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5,428 என்றும் சவரனுக்கு ரூ. 43,424 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.28 உயர்ந்து, சவரனுக்கு ரூ.224 உயர்ந்தது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, இன்று ஒரு கிலோ ரூ. 72,500 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.1,200 அதிகரித்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை:

தமிழகத்தில் இம்மாத தொடக்கம் முதல், தங்கம் விலையில் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. அதன்படி, இன்று சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.5,047 ஆகவும், சவரனுக்கு ரூ.40,376க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.24 உயர்ந்து, சவரனுக்கு ரூ.192 உயர்ந்தது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,506 என சவரனுக்கு ரூ. 44,048 ஆக விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.27 உயர்ந்து, சவரனுக்கு ரூ.216 உயர்ந்தது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.72.50க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோவுக்கு ரூ.72,500க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.1,200 அதிகரித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Gold silver price in metropolitan cities on 09th december