scorecardresearch

தங்கத்திற்கு சீரான விலையை அமல்படுத்திய கேரள அரசு: எந்தெந்த நகரங்களில் என்ன விலை?

Gold Silver Price in Metropolitan Cities – 18th November: சென்னையில் 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,401 என சவரனுக்கு ரூ. 43,208 ஆக விற்பனையாகிறது.

Gold Silver Price in Metropolitan Areas -18th November
Gold Silver Price in Metropolitan Areas -18th November

Gold, Silver Rates Today News Updates in Tamil, 18th November: எரிசக்தி நெருக்கடி ஐரோப்பிய பொருளாதாரத்தை மந்தநிலைக்குள் தள்ளக்கூடும் என்கிற காரணத்தினால், யூரோ டாலருக்கு இணையாக மதிப்பு இருந்தது. டாலரின் வலிமை மற்ற நாணயங்களை வாங்குபவர்களுக்கு கிரீன்பேக்-விலை தங்கத்தின் விலையை உயர்த்துகிறது.

இந்நிலையில், கேரளாவில் ‘ஒரே இந்திய ஒரே தங்கம்’ என்கிற கொள்கையின் படி, தங்கத்திற்கு ஒரே விலையை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த கொள்கையை அமல்படுத்திய நாட்டிலேயே முதல் மாநிலம் என்கிற பெருமையை கேரளா பெற்றிருக்கிறது.

916 தூய்மையுடன் உள்ள 22 காரட் தங்கத்திற்கும் இது பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் சீரான விலையை அமல்படுத்தும் போது நாட்டின் மொத்த தங்க நுகர்வில் 40% தென்னிந்தியாவில் உள்ளது.

இதை தொடர்ந்து, இந்தியாவில் உள்ள தலைநகரங்களில் தங்கம் வெள்ளி விலை நிலவரத்தை பற்றி காணலாம்:

இந்தியாவில் தங்கம் வெள்ளி விலை:

டெல்லி: இந்தியாவின் தலை நகரமான டெல்லியில் இன்று தங்கம் விலை சீராக உள்ளது. 22 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ. 39,120 ஆக உள்ளது. 8 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ. 42,680 ஆக உள்ளது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை, டெல்லியில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ. 61,200 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிலோவிற்கு ரூ.800 குறைந்துள்ளது.

மும்பை: மும்பையில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 4,875 என்றும் சவரனுக்கு ரூ. 39,000 என்று விற்கப்படுகிறது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5,318 ஆகவும் சவரனுக்கு ரூ. 42,544 ஆகவும் விற்கப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, மும்பையில் இன்று ஒரு கிலோ ரூ. 61,200 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிலோவிற்கு ரூ.800 குறைந்துள்ளது.

கொல்கத்தா: கொல்கத்தாவில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 4,875 என்றும் சவரனுக்கு ரூ. 39,000 என்று விற்கப்படுகிறது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5,318 என்றும் சவரனுக்கு ரூ. 42,544 என்றும் விற்கப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, கொல்கத்தாவில் இன்று ஒரு கிலோ ரூ. 61,200 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிலோவிற்கு ரூ.800 குறைந்துள்ளது.

பெங்களூர்: பெங்களூரில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 4,880 என்றும் சவரனுக்கு ரூ. 39,040 என்றும் விற்கப்படுகிறது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5,323 என்றும் சவரனுக்கு ரூ. 42,584 என்றும் விற்கப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, பெங்களுருவில் இன்று ஒரு கிலோ ரூ. 67,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிலோவிற்கு ரூ. 200 குறைந்துள்ளது.

ஹைதெராபாத்: ஹைதெராபாதில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 4,875 என்றும் சவரனுக்கு ரூ. 39,000 என்றும் விற்கப்படுகிறது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5,318 என்றும் சவரனுக்கு ரூ. 42,544 என்றும் விற்கப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, இன்று ஒரு கிலோ ரூ. 67,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிலோவிற்கு ரூ. 200 குறைந்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை:

தமிழகத்தில் இம்மாத தொடக்கம் முதல், தங்கம் விலையில் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. அதன்படி, இன்று சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ. 4,951 ஆகவும், சவரனுக்கு ரூ.39,608க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,401 என சவரனுக்கு ரூ. 43,208 ஆக விற்பனையாகிறது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.67.20க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோவுக்கு ரூ.67,200க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Gold silver price in metropolitan cities on 18th november