சர்வதேச அளவில் தற்போது பொருளாதார மந்த நிலை நிலவி வருகிறது. இதனால் தங்கம் விலை விண்ணை முட்டும் அளவுக்கு எகிறி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் கொரோனா தொற்று பரவல், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு, இஸ்ரேல் - பாலஸ்தீன இடையே போர் ஆகியவற்றை நிபுணர்கள் அடுக்கிறார்கள்.
ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கும் முன், அதாவது 2022 பிப்ரவரியில் தங்கம் விலை கிராமுக்கு சராசரியாக ரூ. 4500 என இருந்தது. போர் தொடங்கிய பிறகு, தங்கத்தின் விலை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. ஆனாலும், 2023 அக்டோபருக்கு முன்பு வரை அதன் விலை ரூ. 5000ஐ கடக்காமல் இருந்தது.
இதனையடுத்து, அந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் - பாலஸ்தீன இடையே போர் முண்ட நிலையில், தங்கத்தின் விலை கிடுகிடுவென உயரத் தொடங்கியது. இதற்கிடையில், கொரோனா தொற்று பரவலால் இருந்த பொருளாதார மந்த நிலையில், இந்த சம்பவத்துடன் ஒட்டிக் கொண்டது.
மற்ற முதலீடுகளில் பணத்தை திருப்பி, அதனை பாதுகாப்பான முதலீடாக கருத்தப்படும் தங்கத்தில் முதலீடுகள் செய்தனர். இதனால், தங்கத்தில் முதலீடுகள் அதிகரித்து, தங்கம் விலையில் முன்பு விட அதிரடி மாற்றங்கள் நிகழ்த் தொடங்கின.
இந்த ஆண்டு தொடங்கியது முதல் தங்கம் விலை அதிரடியாக அதிகரித்து. முதலில் கிராமுக்கு ரூ 6 ஆயிரத்தை தங்கம் விலை எட்டியது. இது நகைப் பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கொண்டு வந்தது. பின்னர், இந்த (மார்ச்) மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்தது.
இந்த நிலையில் தான், தங்கம் விலை இன்று அதிரடியாக அதிகரித்து, தங்க விலை வரலாற்றில் முதல் முறையாக உச்சபட்ச விலையை எட்டியுள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என்றும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால், நகைப் பிரியர்களும், இல்லத்தரசிகளும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 50, 000 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 35 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ. 6,250-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.80,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.