Advertisment

திடீரென ரிவர்ஸ் கியர் போட்ட தங்கம்- வெள்ளி விலை: இன்றைய நிலவரம்

நேற்று வியாழக்கிழமைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 44,360-க்கும், கிராமுக்கு ரூ.15 உயர்ந்து 5,545-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Gold, Silver Price Today 01 September 2023 Chennai Tamil

சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.6,039-க்கும், ஒரு சவரன் ரூ. 48,312-க்கும் விற்பனையாகியது.

Gold, Silver Rates Today News Updates in tamil: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை ஓணம் பண்டிகையை ஒட்டி தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 அதிரடியாக உயர்ந்தது. மறுநாள் புதன்கிழமையும் தங்கத்தின் விலை அதிகரித்தது. சவரனுக்கு ரூ.80 உயர்ந்தது.

Advertisment

இதேபோல் நேற்று வியாழக்கிழமையும் தங்கம் விலை அதிரடியாக அதிகரித்தது. தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 44,360-க்கும், கிராமுக்கு ரூ.15 உயர்ந்து 5,545-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று தங்கத்தின் சற்று சரிந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்து ஒரு சவரன் ரூ. 44,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ. 5,535-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.6,039-க்கும், ஒரு சவரன் ரூ. 48,312-க்கும் விற்பனையாகியது.

வெள்ளி விலை

தங்கம் விலை போல் வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80. 20 -க்கும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.80,200 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gold Rate Business Gold Gold Selling
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment