Advertisment

ஆடியில் ஆட்டத்தை ஆரம்பித்த தங்கம் விலை... அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!

கடந்த சில வாரங்களாக தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி வரும் சூழலில், இன்று மீண்டும் அதிரடியாக அதிகரித்து இருப்பது நகைப் பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Gold Silver Price Today 02 August 2024 CHENNAI in Tamil

சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 7,047-க்கும், ஒரு சவரன் ரூ. 56,376-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Gold Silver Price Today, 02 August  2024 | Gold Rate: இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக உச்சத்தை எட்டியது. அவ்வப்போது சற்று சரிந்து வந்த தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

Advertisment

இந்த சூழலில், கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) 2024-2025 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது, தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி (சுங்கவரி) 15%-லிருந்து 6 % ஆக குறைப்பு என்றும், பிளாட்டினம் மீதான சுங்கவரி 6.4% குறைக்கப்படுகிறது என்றும் அறிவித்தார். இதன் எதிரொலியாக தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக சரிந்தது. 

இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை சவரனுக்கு 400 ரூபாயும், மறுநாள் செவ்வாய்க்கிழமை சவரனுக்கு 210 ரூபாயும் தங்கம் விலை சரிந்தது. ஆனால், புதன்கிழமை  தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 அதிகரித்தது. இதேபோல், நேற்று வியாழக்கிழமை சவரனுக்கு ரூ. 80 அதிகரித்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 51,440-க்கும், கிராமுக்கு ரூ. 10 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ. 6,430-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இன்றைய தங்கம் விலை

இந்த நிலையில், தங்கம் விலை இன்றும் அதிரடியாக அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களாக தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி வரும் சூழலில், இன்று மீண்டும் அதிரடியாக அதிகரித்து இருப்பது நகைப் பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 51,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 30 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ. 6,460-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 7,047-க்கும், ஒரு சவரன் ரூ. 56,376-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

சென்னையில் இன்று வெள்ளி விலை சற்று சரிந்துள்ளது. கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ. 91 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ, 91,000 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Gold Rate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment