gold-rate | gold price today | business: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவி வரும் போர் காரணமாக கடந்த மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், தங்கம் விலை கடந்த புதன்கிழமை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.46 ஆயிரத்து 960-க்கு விற்பனை ஆனது. இதன் மூலம் வரலாறு காணாத புதிய உச்சத்தை தங்கம் விலை தொட்டது. இதனால், நகைப் பிரியர்களும், இல்லத்தரசிகளும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை சவரனுக்கு ரூ. 40 குறைந்தது. இதேபோல், நேற்று வெள்ளிக்கிழமை தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ. 120 குறைந்து ஒரு சவரன் ரூ.46,800-க்கும், கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,850-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 520 அதிகரித்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 520 அதிகரித்து ஒரு சவரன் ரூ.47,320க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.65 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,915-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.6,453-க்கும், ஒரு சவரன் ரூ.51,624-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.83.50-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ ரூ.83,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“