Gold Rate: இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக டிசம்பர் தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இன்றைய தங்கம் விலை
இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து. இதேபோல், மறுநாள் செவ்வாய்க்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 அதிகரித்தது. ஆனால், புதன்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்தது. நேற்று வியாழக்கிழமை மீண்டும் தங்கம் விலை அதிரடியாக அதிகரித்தது. சவரனுக்கு ரூ. 240 அதிகரித்து ஒரு சவரன் ரூ.47,040-க்கும், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,880-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக அதிகரித்துள்ளது. இதனால், நகைப் பிரியர்களுக்கு இல்லத்தரசிகளும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 அதிகரித்து ஒரு சவரன் ரூ.47,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,890-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,425-க்கும், ஒரு சவரன் ரூ. 51,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை 20 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.78, 000 விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“