Gold-rate: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவி வரும் போர் காரணமாக கடந்த மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி முந்தைய நாள் விலையில் விற்பனையாகியது. அதாவது சென்னையில் வெள்ளிக்கிழமை 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் ரூ. 47,280-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.5,910-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தங்கம் விலை
இந்த நிலையில், இன்று தங்கம் அதிரடியாக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ.47,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 10 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஏற்கனவே, தங்கம் விலை சவரனுக்கு ரூ.47,000ஐ கடந்துள்ளதால், நகைப் பிரியர்களுக்கு, இல்லத்தரசிகளும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ. 6 ஆயிரத்தை கடந்து விடுமோ என்கிற அச்சத்திலும் உள்ளனர்.
24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,458-க்கும், ஒரு சவரன் ரூ. 51,664-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை சற்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.80,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“