Gold Silver Price Today, 02 March 2024 | Gold Rate: இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக டிசம்பர் மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இன்றைய தங்கம் விலை
இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்தது. ஆனால், செவ்வாய்க்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 40 அதிகரித்தது. இருப்பினும், மறுநாள் புதன்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 குறைந்தது. ஆனால், வியாழக்கிழமை தங்கத்தின் சவரனுக்கு ரூ.40 அதிகரித்தது. இதேபோல், நேற்று வெள்ளிக்கிழமை அதிரடியாக சவரனுக்கு ரூ.200 அதிகரித்த தங்கம் விலை ஒரு சவரன் ஒரு சவரன் ரூ.46,720-க்கும், கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக அதிகரித்துள்ளது. இதனால், நகைப் பிரியர்களும், இல்லத்தரசிகளும் அதிர்ச்சியில் உள்ளனர். சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரித்து ஒரு சவரன் ரூ.47,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.100 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,940-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,372-க்கும், ஒரு சவரன் ரூ.50,976-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. கிராமுக்கு 80 காசுகள் அதிகரித்து , ஒரு கிராம் வெள்ளி ரூ.77-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.77,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“