மீண்டும் ஜம்ப் அடித்த தங்கம் விலை: இன்றைய ரேட் என்ன?

கடந்த 3 நாளாக அதிரடியாக குறைந்த வந்த தங்கம் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. இதனால், நகைப் பிரியர்களுக்கு, இல்லத்தரசிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 3 நாளாக அதிரடியாக குறைந்த வந்த தங்கம் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. இதனால், நகைப் பிரியர்களுக்கு, இல்லத்தரசிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Gold Silver Price Today 02 November 2023 CHENNAI in Tamil

சென்னையில் 24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் 6,213-க்கும், ஒரு சவரன் ரூ. 49,704-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Gold-rate | today gold price | business: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. தற்போது இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் நிலவி வருவதால், கடந்த மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 

Advertisment

இதனிடையே, இந்த வாரம் தொடக்கம் முதல் தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. கடந்த திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.288 குறைந்த தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.160 சரிந்தது. இதேபோல் நேற்று புதன்கிழமையும் சவரனுக்கு ரூ.232 குறைந்த தங்கம் விலை ஒரு சவரன் ரூ. 45,488-க்கும், கிராமுக்கு ரூ.29 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,686 -க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. இதனால், நகைப் பிரியர்களுக்கு, இல்லத்தரசிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இன்று  22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.45,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,695-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் 6,213-க்கும், ஒரு சவரன் ரூ. 49,704-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

Advertisment
Advertisements

வெள்ளி விலை 

வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து ரூ.77.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.77,700-க்கு விற்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Gold Rate Business Gold

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: