Advertisment

மீண்டும் அப்படியே பல்டி அடித்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் இதுதான்!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 44,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Gold, Silver Price Today 02 September 2023 Chennai Tamil News

சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.6,049-க்கும், ஒரு சவரன் ரூ. 48,392-க்கும் விற்பனையாகியது.

Gold, Silver Rates Today News Updates in Tamil: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்து ஒரு சவரன் ரூ. 44,280-க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ. 5,535-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Advertisment

இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 44,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ. 5,555-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.6,049-க்கும், ஒரு சவரன் ரூ. 48,392-க்கும் விற்பனையாகியது.

வெள்ளி விலை

வெள்ளியின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80. -க்கும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.80,000 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gold Rate Business Gold Gold Selling
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment