Gold-rate: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக கடந்த மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 அதிகரித்து ஒரு சவரன் ரூ.47,360-க்கும், கிராமுக்கு ரூ. 10 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,920-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தங்கம் விலை
இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 குறைந்து ஒரு சவரன் ரூ.47,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 5 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,915-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,453-க்கும், ஒரு சவரன் ரூ. 51,624-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஏற்கனவே, தங்கம் விலை சவரனுக்கு ரூ.47,000ஐ கடந்துள்ளதால், நகைப் பிரியர்களுக்கு, இல்லத்தரசிகளும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ. 6 ஆயிரத்தை கடந்து விடுமோ என்கிற அச்சத்திலும் உள்ளனர்.
வெள்ளி விலை
வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.