gold-rate | today gold price | business: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. தற்போது இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் நிலவி வருவதால், கடந்த மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
கடந்த திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.288 குறைந்த தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.160 சரிந்தது. இதேபோல் புதன்கிழமையும் சவரனுக்கு ரூ.232 குறைந்தது. ஆனால், நேற்று வியாழக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ஒரு சவரன் ரூ.45,560-க்கும், கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,695-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. இதனால், நகைப் பிரியர்களுக்கு, இல்லத்தரசிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.45,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் 6,218-க்கும், ஒரு சவரன் ரூ. 49,744-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.77,000-க்கு விற்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“