Gold Rate: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக கடந்த மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 அதிகரித்தது. நேற்று புதன்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 குறைந்து ஒரு சவரன் ரூ.47,320-க்கும், கிராமுக்கு ரூ. 5 குறைந்து ஒரு கிராம் ரூ.5,915-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தங்கம் விலை
இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக சரிந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்து ஒரு சவரன் ரூ.46,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 45 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,870-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,404-க்கும், ஒரு சவரன் ரூ. 51,232-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையின் விலையும் இன்று அதிரடியாக சரிந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.