Gold Silver Price Today, 04 May 2024 | Gold Rate: இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக உச்சத்தை எட்டியது. அவ்வப்போது சற்று சரிந்து வந்த தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 அதிகரித்தது. ஆனால், திங்கள்கிழமை சவரனுக்கு ரூ. 240 குறைந்தது. இருப்பினும், மறுநாள் செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 80 அதிகரித்த தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ. 920 அதிரடியாக குறைந்தது. எனினும், வியாழக்கிழமை சவரனுக்கு ரூ. 640 அதிரடியாக அதிகரித்த தங்கம் விலை, நேற்று வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ. 800 அதிரடியாக குறைந்து ஒரு சவரன் ரூ. 52,920-க்கும், கிராமுக்கு ரூ. 100 குறைந்து ஒரு கிராம் ரூ. 6,615-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தங்கம் விலை
இந்த நிலையில், வாரத்தின் கடைசி நாளான இன்று சனிக்கிழமை தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி வரும் சூழலில், இன்று கொஞ்சம் குறைந்து இருப்பது நகைப் பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 குறைந்து ஒரு சவரன் ரூ. 52,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 100 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 6,600-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 86.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.86,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“