வார தொடக்கத்தில் வந்த நல்ல செய்தி... இன்றைய தங்கம் நிலவரம் பாருங்க!

தங்கத்தின் விலையில் இன்று மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 7,370-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலையில் இன்று மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 7,370-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

author-image
WebDesk
New Update
gold silver price today 27 January 2025 Chennai in Tamil

இன்றைய தங்கம் விலை

இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக உச்சத்தை எட்டியது. அவ்வப்போது சற்று சரிந்து வந்த தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

Advertisment

இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தும் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், கடந்த மாதம் 16 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை பதிவு செய்தது. அதன் பின்னரும், தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே பயணித்து வருகிறது. குறிப்பாக, கடந்த மாதம் 19 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.58 ஆயிரம் என்ற நிலையையும் தாண்டியது.

அதனைத் தொடர்ந்தும் தங்கம் விலை உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் தங்கம் விலை கடந்த மாதம் 30ம் தேதி ஒரு சவரம் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் பெற்றது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியது. நேற்று முன்தினம் தங்கம் விலை சற்று குறைந்து ஒரு சவரன் ரூ.58,960-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை 

Advertisment
Advertisements

இந்த நிலையில், தங்கத்தின் விலையில் இன்று மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 7,370-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.58,960-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

வெள்ளி விலை

தங்கத்தைப் போலவே, வெள்ளியின் விலையும் எந்த மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ.106.00-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி 1,06,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Gold Rate

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: