ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1000 சரிவு... இன்னும் குறையுமா? எதிர்பார்க்கும் நகைப் பிரியர்கள்!

தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ. 1000 சரிந்து அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியை கொண்டுவந்துள்ளது. மேலும் தங்கம் விலை குறையுமா என்றும் எதிர்பார்த்துள்ளனர்.

தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ. 1000 சரிந்து அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியை கொண்டுவந்துள்ளது. மேலும் தங்கம் விலை குறையுமா என்றும் எதிர்பார்த்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Gold Silver Price Today 02 August 2024 CHENNAI in Tamil

வெள்ளியின் விலையும் அதிரடியாக சரிந்துள்ளது. கிராமுக்கு ரூ.2.10 சரிந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.81.40-க்கு விற்பனையாகிறது.

Gold-rate | gold | business: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவி வரும் போர் காரணமாக கடந்த மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 

Advertisment

இன்றைய தங்கம் விலை

கடந்த சனிக்கிழமை தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 520 அதிகரித்து அதிர்ச்சி கொடுத்தது. இதேபோல் நேற்று திங்கள்கிழமை தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 480 அதிகரித்து ஒரு சவரன் ரூ.47,800க்கும், கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,975-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியதால் நகைப் பிரியர்களும், இல்லத்தரசிகளும் அதிர்ச்சியில் உறைந்தனர். 

இந்த நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ. 1000 சரிந்து அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியை கொண்டுவந்துள்ளது. மேலும் தங்கம் விலை குறையுமா என்றும் எதிர்பார்த்துள்ளனர். சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1000 குறைந்து  ஒரு சவரன் ரூ.46,800க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.125 சரிந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,850-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment
Advertisements

24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.6,382-க்கும், ஒரு சவரன் ரூ.51,056-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை 

வெள்ளியின் விலையும் அதிரடியாக சரிந்துள்ளது. கிராமுக்கு ரூ.2.10 சரிந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.81.40-க்கு  விற்பனையாகிறது. ஒரு கிலோ ரூ.81,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Gold Rate Business Gold

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: