Gold-rate | gold | business: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவி வரும் போர் காரணமாக கடந்த மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 480 அதிகரித்து ஒரு சவரன் ரூ.47,800-க்கும், கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,975-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியதால் நகைப் பிரியர்களும், இல்லத்தரசிகளும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இதனையடுத்து, நேற்று செவ்வாய்க்கிழமை தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 1000 சரிந்து அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியை கொண்டுவந்தது. ஒரு சவரன் தங்கம் ரூ.46,800க்கும், ஒரு கிராம் ரூ.5,850-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், தங்கம் விலை இன்று 2வது நாளாக அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 குறைந்து ஒரு சவரன் ரூ.46,520-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ. 35 சரிந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 5,815-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.6,344-க்கும், ஒரு சவரன் ரூ.50,752-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசுகள் சரிந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.81.-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ ரூ.81,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“