Advertisment

2வது நாளாக சரிந்த தங்கம்... இன்றைய விலை நிலவரம் பாருங்க!

2வது நாளாக தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு மேலும் ரூ.160 குறைந்துள்ளது. இதனால் நகைப் பிரியர்களும், இல்லத்தரசிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சவரன் தங்கம் ரூ.46,640-க்கு விற்பனையாகிறது.

author-image
WebDesk
New Update
Gold Silver Price Today  06 February 2024 CHENNAI in Tamil

சென்னையில் 24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,360-க்கும், ஒரு சவரன் ரூ. 50,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Gold Rate: இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக டிசம்பர் தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

Advertisment

இன்றைய தங்கம் விலை

இந்நிலையில், வாரத்தின் தொடக்க நாளான நேற்று திங்கள் கிழமை தங்கம் விலை குறைந்து காணப்பட்டது. சவரனுக்கு ரூ. 160 குறைந்த தங்கம் விலை ரூ. 46,800-க்கும், கிராமுக்கு ரூ. 20 குறைந்து ஒரு கிராம் ரூ. 5,850-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இந்த நிலையில், 2வது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. இதனால் நகைப் பிரியர்களும், இல்லத்தரசிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர். சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.46,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,830-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,360-க்கும், ஒரு சவரன் ரூ. 50,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி விலை 

தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் குறைந்து காணப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ரூ.76-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.76, 000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Gold Rate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment