Gold-rate: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக கடந்த மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 அதிகரித்தது. மறுநாள் புதன்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 குறைந்தது. வியாழக்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 அதிரடியாக சரிந்தது. இதேபோல் தொடர்ந்து 3வது நாளாக நேற்று வெள்ளிக்கிழமையும் தங்கம் விலை சரிந்து காணப்பட்டது. நேற்று சவரனுக்கு ரூ. 80 குறைந்து ஒரு சவரன் ரூ.46,880-க்கும், கிராமுக்கு ரூ. 10 குறைந்து ஒரு கிராம் ரூ.5,860-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தங்கம் விலை
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை சரிந்துள்ளது. இதனால், நகைப் பிரியர்களும், இல்லத்தரசிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர். சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்து ஒரு சவரன் ரூ.46,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 10 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,850-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,382-க்கும், ஒரு சவரன் ரூ.51,056-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி ஒரு கிராம் ரூ.78-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.78,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“