Gold Silver Price Today, 06 May 2024 | Gold Rate: இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக உச்சத்தை எட்டியது. அவ்வப்போது சற்று சரிந்து வந்த தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 குறைந்து ஒரு சவரன் ரூ. 52,800-க்கும், கிராமுக்கு ரூ. 15 குறைந்து ஒரு கிராம் ரூ. 6,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தங்கம் விலை
இந்த நிலையில், வாரத்தின் தொடக்க நாளான இன்று திங்கள்கிழமை தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களாக தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி வரும் சூழலில், இன்று மீண்டும் அதிகரித்து இருப்பது நகைப் பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் ஆழத்தியுள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 52,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 10 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 6,610-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 7,211-க்கும், ரூ. 57,688-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளியின் விலை அதிரடியாக அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ. 1 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 87-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.86,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“