Gold Rate: இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக டிசம்பர் மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இன்றைய தங்கம் விலை
இந்நிலையில், கடந்த திங்கள் கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்தது. இதேபோல், செவ்வாய்க்கிழமையும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது. ஆனால், நேற்று புதன்கிழமை சட்டென அப்படியே சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.46,800-க்கும், கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,850-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. இதனால் நகைப் பிரியர்களும், இல்லத்தரசிகளும் கொஞ்சம் மகிழ்ச்சியில் உள்ளனர். சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,840-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,372-க்கும், ஒரு சவரன் ரூ. 50,976-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளியின் விலை கிராமுக்கு எவ்வித மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.76-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.76, 000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“